“அண்ணல் அம்பேத்கர் தொழில்முன்னோடிகள் திட்டத்தின்” (AABCS)
வெளியிடப்பட்ட தேதி : 24/05/2023
இன்று 23.05.2023 ல் சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் கூட்ட அரங்கத்தில் “அண்ணல் அம்பேத்கர் தொழில்முன்னோடிகள் திட்டத்தின்” (AABCS) அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்க்சியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் விளக்கவுரை தொகுப்பு கையேட்டினை சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி. சு. அமிர்தஜோதி, இ.ஆ. ப அவர்கள் வெளியிட்டார்கள். மேலும் திருமதி. புவனேஸ்வரி என்ற தொழில்முனைவோருக்கு இத்திட்டத்தின் கீழ் ரூ.18 இலட்சத்திற்கான வங்கி கடனுதவி ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உடனிருந்தோர் திரு. என். இளங்கோவன், மண்டல இணை இயக்குநர் தொழில் வணிகத்துறை, வங்கிமேலாளர்கள், DICCI.TAHDCO மற்றும் உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.