01.03.2023 முதல் 09.03.2023 வரை மேல்நிலை இரண்டாம் மற்றும் முதலாமாண்டு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் இரண்டு சுற்றுகளாக நடைபெற உள்ளன. சென்னை மாவட்டத்தில்சுமார் 47,000 மாணவர்கள் மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வினையும் சுமார் 48,000 மாணவர்கள் முதலாமாண்டு தேர்வினையும் எழுத உள்ளனர். மாணவர்கள் சிறப்பான முறையில் இத்தேர்வுகளை எழுதுவது குறித்து தேவையான ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.