சமூக நலத்துறை
பணியிடங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம்
முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டம் சார்பான விவரங்கள்
நோக்கம்:
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான பொருள்வளம் போல், மனித வளத்தை மேம்படுத்த குழந்தைகளின் மேம்பாடும் முக்கியமானது என்பதால் குழந்தைகளைப் பாதுகாத்து பராமரிப்பதைக் கருத்தில் கொண்டு சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை குழந்தைகளின் பாதுகாப்பு, நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக குறிப்பாக பெண்குழந்தைகளுக்கு என முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தினை சென்னை மாவட்டத்தில் சமூகநல அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திட்ட விவரம்:
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 1992 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் தற்போது ஒவ்வொரு குழந்தைக்கும் கல்விக்கான உரிமை அளிக்கப்பட்டு, ஏழை குடும்பத்திற்கு சில சரிபார்க்கத்தக்க நிபந்தனைகளுடன் ஊக்கத் தொகையுடன் கூடிய வைப்புத் தொகை 18 வயது முடிவில் அளிக்கும்வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தொடர் நடவடிக்கை:
தற்போது பொது சேவை மையத்தில் விண்ணப்பத்தாரர்களால் விண்ணப்பிக்கப்படுகிறது.விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் சான்றுகள். மாவட்ட சமூகநல அலுவலரால் சரிபார்க்கப்பட்டு, சரியான விண்ணப்பங்கள் பட்டியலிடப்பட்டு, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
1992 முதல் 2001 வரை தமிழ்நாடு போக்குவரத்து நிதி கழகத்தின் மூலமும், 2002 முதல் நாளது வரை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் மூலமும் கீழ்கண்டவாறு வைப்புத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
திட்டம் 1
இத்திட்டத்தின் கீழ் 01.08.2011 அன்றோ அல்லது பிறகோ பிறந்து, குடும்பத்தில் ஒரே பெண் குழந்தை மட்டும் இருப்பின் அப்பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையான ரூ.50,000/- தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் இரசீது பெண் குழந்தையின் பெயரில் வழங்கப்படுகிறது.
-> 1 பெண் குழந்தை 01.08.2011 க்கு முன்பு பிறந்த குழந்தை எனில் ரூ.25,000/-
-> 1 பெண் குழந்தை 01.08.2011 க்கு பின்பு பிறந்த குழந்தை எனில் ரூ.50,000/-
மேற்படி வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டிலும் புதுப்பிக்கப்பட்டு, 18 வயது நிறைவடைந்ததும், அப்போதைக்குரிய திரண்ட வட்டி விகிதத்துடனும், கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய முதிர்வுத் தொகை அக்குழந்தைகளுக்கு மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் வழங்கப்படும்.
திட்டம் 2
இத்திட்டத்தின் கீழ் 01.08.2011 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்து, குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருப்பின் ஒவ்வொரு பெண் குழந்தையின்பேரிலும் நிலையான வைப்புத் தொகையாக தலா ரூ.25,000/- தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் இரசீது நகல், பெண் குழந்தைகளின் பெயரில் வழங்கப்படும்.
மேற்படி வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு 18 வது நிறைவடைந்ததும், அப்போதைக்குரிய திரண்ட வட்டி விகிதத்துடன், கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய நிலை வைப்புத் தொகையின் முதிர்வுத் தொகை அக்குழந்தைகளுக்கு மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் வழங்கப்படும்.
-> 01.08.2011 க்கு பின்பு பிறந்த குழந்தைகள் எனில் தலா ரூ. 25,000/-
திட்டம் 3
இத்திட்டத்தின் கீழ் முதல் பிரசவத்தில் 1 பெண்குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் 2 பெண் குழந்தைகளும் பிறந்தால், தலா 1 குழந்தைக்கு ரூ. 25,000/- வீதம் தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் இரசீது நகல், பெண் குழந்தைகளின் பெயரில் வழங்கப்படும்.
மேற்படி வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு 18 வது நிறைவடைந்ததும், அப்போதைக்குரிய திரண்ட வட்டி விகிதத்துடன்,கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய நிலை வைப்புத் தொகையின் முதிர்வுத் தொகை அக்குழந்தைகளுக்கு மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் வழங்கப்படும்.
-> 01.08.2011 க்கு பின்பு பிறந்த குழந்தைகள் எனில் தலா ரூ.25,000/-
தகுதிகள்
- பெற்றோரில் ஒருவர் 35 வயதிற்குள் அரசாங்க மருத்துவமனையில் கருத்தடை செய்ததற்கான சான்று அளிக்க வேண்டும்.
- பெண் குழந்தை மட்டுமே இருக்க வேண்டும். ஆண் வாரிசு இருக்கக் கூடாது.
- வருமானச் சான்று ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும்.
- இரண்டாவது குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்
வ.எண் | திட்டம் | வழங்கப்படும் உதவி |
---|---|---|
1. | திட்டத்தின் நோக்கம் | ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு நிதியுதவி வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும் |
2. | வழங்கப்படும் உதவி | திட்டம் 1
ரூ.25,000 – காசோலை மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் திட்டம் 2 ரூ50,000 – காசோலை மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் |
3. | திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் | திட்டம் 1
1. மணப்பெண் 10-ஆம் வகுப்பு பள்ளியில் படித்து தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க 2. தனியார் தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி 3. பழங்குடியினராக இருந்தால் 5-வது படித்திருத்தல் வேண்டும். திட்டம் 2 1. பட்டதாரிகள் கல்லிலூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் 2. பட்டயப் படிப்பு (னுiயீடடிஅய ழடிடனநசள) தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். பொது 1. குடும்ப ஆண்டு வருமானம் 72,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 2. ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படும். 3. திருமணத் தேதியன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். உச்ச வயது |
4. | சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள் | 1. பள்ளி மாற்றுச் சான்று நகல்
2. மதிப்பெண் பட்டியல் நகல். பத்தாம் வகுப்பு திட்டம் – 1 3. பட்டப்படிப்பு பட்டயப்படிப்பு தேர்ச்சி சான்று நகல் திட்டம் – 2 4. வருமானச் சான்று 5. திருமண அழைப்பிதழ் (திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க |
5 | விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு | திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல் நாள் வரை |
6 | தொடர்பு அலுவலரின் பதவி | மாநகராட்சி ஆணையர் (மாநகராட்சிப் பகுதிகளில்) |
ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித்திட்டம்
வ.எண் | திட்டம் | வழங்கப்படும் உதவி |
---|---|---|
1. | திட்டத்தின் நோக்கம் | ஏழை விதவையரின் மகளின் திருமணத்தை நடத்துவதில் போதிய நிதிவசதி இல்லாததால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் திருமணத்திற்கு நிதி உதவி வழங்குதல். |
2. | வழங்கப்படும் உதவி | திட்டம் 1
ரூ.25,000 – காசோலை மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயம் திட்டம் 2 ரூ50,000 – காசோலை மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயம். |
3 | திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் | திட்டம் 1
1. கல்வித் தகுதி தேவை இல்லை. திட்டம் 2 1. பட்டதாரிகள் கல்லிலூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பொது 1. குடும்ப ஆண்டு வருமானம் 72,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். |
4 | சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள் | 1. சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் விதவை உதவித்தொகை பெறுபவர்களுக்கு விதவைச் சான்று, வருமானச் சான்று தேவையில்லை. 2. ஜீதவை உதவித் தொகை பெறாதவர்கள் மேற்படி விதவைச் சான்று மற்றும் வருமானச் சான்று வட்டாட்சியரிடமிருந்து பெற்று சமர்பிக்க வேண்டும் 3. விதவையர் மகளின் வயது சான்றிதழ்.திட்டம் 21. பட்டப்படிப்பு படித்தவர்கள் கல்லூரிகள் தொலைதூரக் கல்வி அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்த வெளி பல்கலைக் கழகங்களில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களின் நகல் மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்கள் தமிழக அரசின் தொழில் நுட்பக் கல்வி இயக்குனரசத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களின் நகல். |
5 | விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு | திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கலாம். சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல் நாள் வரை விண்ணப்பிக்கலாம், |
6 | தொடர்பு அலுவலரின் பதவி | மாவட்ட சமூகநல அலுவலர்கள் |
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம்
வ.எண் | திட்டம் | வழங்கப்படும் உதவி |
---|---|---|
1. | திட்டத்தின் நோக்கம் | ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு உதவுதல் |
2. | வழங்கப்படும் உதவி |
திட்டம் 1ரூ.25,000 – காசோலை மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் திட்டம் 2ரூ50,000 – காசோலை மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் |
3 | திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் |
திட்டம் 11. கல்வித் தகுதி தேவை இல்லை. திட்டம் 21. பட்டதாரிகள் கல்லிலூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் பொது1. ஆதரவற்ற பெண்கள் |
4 | சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள் |
திட்டம் -11. சட்டமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினரிடமிருந்து ஆதரவற்றோர் சான்று பெற்று வழங்கலாம் அல்லது திட்டம் 21. பட்டப்படிப்பு படித்தவர்கள் கல்லூரிகள் தொலைதூரக் கல்வி அரசால் |
5 | விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு | திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கலாம். சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல் நாள் வரை விண்ணப்பிக்கலாம், |
6 | தொடர்பு அலுவலரின் பதவி | மாவட்ட சமூகநல அலுவலர்கள் |
டாக்டர் தர்மம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம்
வ.எண் | திட்டம் | வழங்கப்படும் உதவி |
---|---|---|
1. | திட்டத்தின் நோக்கம் | விதவைகளுக்கு புதுவாழ்வு அளித்தல் |
2. | வழங்கப்படும் உதவி |
திட்டம் 1ரூ.25,000 – வழங்கப்படுகிறது. (இதில் ரூ.15,000 –காசோலையாகவும் ரூ.10,000 தேசிய திட்டம் 2ரூ50,000 – காசோலை மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் |
3 | திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் |
திட்டம் 11. கல்வித் தகுதி தேவை இல்லை. திட்டம் 21. பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் பொது1. வருமான வரம்பு ஏதும் இல்லை |
4 | சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள் | 1. விதவைச் சான்று 2. மறுமணம் செய்வதற்கான திருமண அழைப்பிதழ் 3. மணமகன் மற்றும் மணமகளின் வயதுச் சான்று 4. பட்டப்படிப்பு பட்டயப்படிப்பு தேர்ச்சி சான்று திட்டம் 2 5. திருமண புகைப்படம் |
5 | விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு | திருமண நாளிலிருந்து 6 மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். |
6 | தொடர்பு அலுவலரின் பதவி | மாவட்ட சமூகநல அலுவலர்கள் |
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம்
வ.எண் | திட்டம் | வழங்கப்படும் உதவி |
---|---|---|
1. | திட்டத்தின் நோக்கம் | சமுதாயத்தில் இனப்பாகுபாட்டைக் களைந்து சமநிலையை உருவாக்குதல். |
2. | வழங்கப்படும் உதவி |
திட்டம் 1ரூ.25,000 – வழங்கப்படுகிறது. (இதில் ரூ.15,000 –காசோலையாகவும் ரூ.10,000 தேசிய திட்டம் 2ரூ50,000 – வழங்கப்படுகிறது (ரூ.30,000 –காசோலையாகவும் ரூ.20,000 – தேசிய |
3 | திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் |
கீழ்க்கண்ட இரண்டு வகையான கலப்புத் திருமணங்கள் நிதியுதவி பெற
|
4 | சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள் |
திட்டம் 11. திருமணப் பத்திரிகை அல்லது திருமண பதிவுச் சான்று திட்டம் 2பட்டப்படிப்பு படித்தவர்கள் கல்லூரிகள் தொலைதூரக் கல்வி அரசால் |
5 | விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு | திருமணம் முடிந்து 2 வருடங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். |
6 | தொடர்பு அலுவலரின் பதவி | மாவட்ட சமூகநல அலுவலர்கள் |
சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம்
வ.எண் | திட்டம் | வழங்கப்படும் உதவி |
---|---|---|
1. | திட்டத்தின் நோக்கம் | சமுதாயத்தில் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், உடல் ஊனமுற்ற ஆண் மற்றும் பெண் ஆகியோர் சுயதொழில் செய்து தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள உதவும் வகையில் தையல் இயந்திரம் இலவசமாக வழங்குதல். |
2. | வழங்கப்படும் உதவி | தையல் இயந்திரம் மற்றும் உபகரணங்கள் |
3 | திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் | 1. ஆதரவற்ற பெண்கள் விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனுடைய ஆண்கள் பெண்கள், சமூகத்தில் பாதிக்கப்பட்ட பிறமகளிர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மகளிர்.2. தையல் தைக்க தெரிந்திருக்க வேண்டும்.3. ஆண்டு வருமானம் ரூ.72,000 – க்கு மிகாமல் இருக்க வேண்டும்.4. 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். |
4 | சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள் | 1. ஆதரவற்றவர் கைவிடப்பட்டவர் விதவை மாற்றுத் திறனுடையோர் என்பதற்கான சான்றிதழ்.2. குடும்ப வருமானச் சான்றிதழ்.3. வயதுச் சான்றிதழ்.4. விண்ணப்பதாரர் தையல் தெரிந்தவர் என்பதற்கான சான்றிதழ்.5. சாதிச் சான்று. 6. விண்ணப்பதாரரின் புகைப்படம். |
5 | திட்டம் குறித்த விவரம் | சமூக நலத் துறையின் மூலம் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள், ஆண் பெண் மாற்றுத் திறனாளிகள், சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆகியோர் சுயமாக தொழில் செய்து தங்களது வருவாயைப் பெருகிக் கொள்வதற்கு உதவிடும் வகையில், சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலலவ தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ் 2013 -14 ஆம் நிதியாண்டு முதல் கூடுதல் அம்சங்களைக் கொண்ட நவீன ரக தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. |
6 | தொடர்பு அலுவலரின் பதவி | மாவட்ட சமூகநல அலுவலர்கள் |
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம்
நோக்கம் – ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு உதவி வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும்.
வழங்கப்படும் உதவி
- திட்டம் 1- ரு25,000/- (காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 8 கிராமம் (1 சவரன்) 22 காரட் தங்கநாணயம்
- திட்டம் 2- ரு50,000/- (காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 8 கிராமம் (1 சவரன்) 22 காரட் தங்கநாணயம்
பயன்பெறுபவர்- ஏழைப்பெண்களின் தாய் அல்லது தந்தை பெயரால் வழங்கலாம். பெற்றோர் இல்லையெனில் மகளுக்கு வழங்கலாம்.
கல்வித்தகுதி
திட்டம் 1
- மணப்பெண் 10ம் வகுப்பு வரை பள்ளியில் படித்து இருத்தல் வேண்டும் (தேர்ச்சி அல்லது தோல்வி)
- தனியார் / தொலைதூரக்கல்வி மூலம்
- படித்து இருந்தால் 10ம்வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்
- பழங்குடியினராக இருந்து 5வது வரை படித்திருத்தல் வேண்டும்.
திட்டம் 2
- பட்டதா ரி கல்லூரியிலோ அல்லது தொலைதூரக்கல்வி மூலமாகவே அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.
- பட்டயப்படிப்பு (டிப்ளமோ ஹோல்டேர்ஸ்) எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
- திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு நேரங்களில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல் நாள் வரை விண்ணப்பிக்கலாம்.
- திருமண தேதியன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.உச்ச வயது வரம்பு இல்லை.
- ஒரு குடும்பத்தில் ஒரு பெண்க்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரு. 72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்
- வட்டாட்சியாடமிருந்து பெறப்பட்ட வருமான சான்றிதழ்.
- மணப்பெண்ணின் கல்வி தகுதிக்கான சான்றிதழ்.
- மணப்பெண்ணின் வயதிற்கான சான்றிதழ்.
- திருமண அழைப்பிதழ்.
அணுக வேண்டிய அலுவலர்
சம்மந்தப்பட்ட மாநகராட்சி மண்டல அலுவலர், சென்னை
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித்திட்டம்
நோக்கம் – விதவைகள் மறுமணத்தை ஊக்குவித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல்
வழங்கப்படும் உதவி
திட்டம் 1
ரு.25,000/- வழங்கப்படுகிறது (இதில் ரு. 15,000/- காசோலையாகவும் ரு. 10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 8 கிராம் (1 சவரன்) 22 காரட் தங்க நாணயம்
திட்டம் 2
ரு.50,000/- வழங்கப்படுகிறது (இதில் ரு. 30,000/- காசோலையாகவும் ரு. 20,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 8 கிராம் (1 சவரன்) 22 காரட் தங்க நாணயம்
பயன்பெறுபவர் மறுமணம் செய்து கொள்ளும் விதவைப்பெண்
கல்வித்தகுதி
திட்டம் 1
கல்வித்தகுதி ஏதும் இல்லை
திட்டம் 2
- பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலைதூரக்கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலோபடித்து தோச்சி பெற்று இருத்தல் வேண்டும்
- பட்டயப்படிப்பு(டிப்ளமோ ஹோல்டேர்ஸ் ) எனில் தமிழக அரசின் தொழில்நுடப கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தோச்சி பெற்றிருத்தல் வேண்டும். வருமான வரம்பு இல்லை
- மணமகளின் குறைந்தபட்ச வயது 20 ஆக இருத்தல் வேண்டும். மணமகனின் வயது 40 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
- திருமண நாளிலிருந்து 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்
- விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்
- விதவைச்சான்று
- மறுமணத்திற்கான திருமண பத்திக்கை
- மணமகன் மற்றம் மணமகளின் வயதுச்சான்று
- பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு தோர்ச்சி சான்று நகல்
அணுக வேண்டிய அலுவலர்
மாவட்ட சமுக நல அலுவலர், சென்னை-1.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத்திருமண உதவித்திட்டம்
நோக்கம்
கலப்புத்திருமணங்களை ஊக்கப்படுத்தி பிறப்பு அடிப்படையிலான சாதி இன வேறுபாட்டை அகற்றி தீண்டாமை எனும் கொடுமையை ஒழித்தல்
வழங்கப்படும் உதவி
திட்டம் 1
ரு.25,000/- வழங்கப்படுகிறது (இதில் ரு. 15,000/- காசோலையாகவும் ரு. 10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 8 கிராம் (1 சவரன்) 22காரட் தங்க நாணயம்
திட்டம் 2
-ரு.50,000/- வழங்கப்படுகிறது (இதில் ரு. 30,000/- காசோலையாகவும் ரு. 20,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 8 கிராம் (1 சவரன்) 22 காரட் தங்க நாணயம்
பயன் பெறுபவர் – கலப்பு திருமணம் செய்த தம்பதியருக்கு
பிரிவு 1
புதுமணத் தம்பதியால் ஒருவர் ஆதிதிராவிடா அல்லது பழங்குடியினராக இருந்து பிற இனத்தவறை மணந்து கொண்டால் நிதியுதவி வழங்கப்படும்
பிரிவு 2
புதுமண தம்பதியால் ஒருவர் முற்பட்ட (இதர) வகுப்பினராகவும், மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் நிதியதவி வழங்கப்படும்
கல்வித்தகுதி
திட்டம் 1
கல்வித்தகுதி எதும் இல்லை
திட்டம் 2
- பட்டதாரிகள், கல்லுரியிலோ அல்லது தொலைதூரக்கல்வி மூலமாகவே அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலே படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.
- பட்டயப்படிப்பு(டிப்ளமோ ஹோல்டேர்ஸ் ) எனில் தமிழக அரசின் தொழில்நுடப கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
அணுக வேண்டிய அலுவலர்
மாவட்ட சமுக நல அலுவலர், சென்னை
சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்
நோக்கம்:
ஆதரவற்ற பெண்கள் / விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனுடைய ஆண்கள் / பெண்கள், சமுகத்தில் பாதிக்கப்பட்ட பிற மகளிர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மகளிர் ஆகியோர் சுயதொழில் திறனை பெருக்கி அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயாத்திக்கொள்ள இலவச தையல் இயந்திரம் வழங்கதல்.
வழங்கப்படும் உதவி
தையல் இயந்திரம் மற்றும் உபகரணங்கள்
பயன் பெறுபவர்
ஆதரவற்ற பெண்கள் / விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்று திறனுடைய ஆண்கள் / பெண்கள், சமுகத்தில் பாதிக்கப்பட்ட பிறமகளிர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மகளிர்
தகுதிகள்
- கல்வித்தகுதி ஏதும் தேவையில்லை.
- ஆண்டு வருமானம் ரு. 72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- 20 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- தையல் தைக்கத் தொந்திருக்க வேண்டும்
இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்
- ஆதரவற்ற / கைவிடப்பட்டவர்/ விதவை / மாற்றுத் திறனுடையோ என்பதற்கான சான்றிதழ்.
- குடும்ப வருமானச்சான்றிதழ்.
- வயதுச்சான்றிதழ்.
- விண்ணப்பதாரார் தையல் தெரிந்தவரா என்பதற்கான சான்றிதழ்.
அணுக வேண்டிய அலுவலர்
மாவட்ட சமுகநல அலுவலர், சென்னை-1.
திருநங்கைகள் நலனுக்கான திட்டங்கள் செயல்படுத்துதல்
பதிவு செய்யப்படும் திருநங்கைகள் மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டு திருநங்கை என கண்டறியப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
சுய உதவிக் குழு அமைக்க உதவுதல் சிறுதொழில் பயிற்சி அளித்தல், சுய உதவி குழுக்களுக்கு தொழில் தொடங்க 25 சதவிகித மானியத்தில் ரு. 15,00,000/- வரை கடனுதவி அளித்தல் போன்ற பல நல திட்ட உதவிகள் திருநங்கைகளுக்கு வழங்கப்படுகிறது.
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தைசெயல்படுத்துதல்
இச்சட்டத்தின் கீழ் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் எவரும் நிவாரணம் கோரலாம், குடும்ப வன்முறை என்பது உடல்ஊறு பாலியல் ஊறு, வாத்தை தியாக அல்லத உணர்வுகளை புண்படுத்தும் ஊறு,பொருளாதார ஊறு ஆகியவைகளாகும், பாதிக்கப்பட்ட நபருக்கு தேவைப்பட்டால் இருப்பிடம், ஆலோசனை வசதிகள்,மருத்தவ வசதிகள் எற்படுத்தித்தரப்படும் பாதிக்கப்பட்ட நபர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிவாரணங்களையும் இச்சட்டத்தின் முலம் பெறலாம்.
வரதட்சணை தடுப்புச்சட்டம் 1961ஐ செயல்படுத்துதல்
வரதட்சணை தடுப்பு சட்டம் 1961ன் கீழ் பாதிக்கப்பட்ட பெண் வரதட்சணை தடுப்பு அதிகாரி மாவட்ட சமுகநல அலுவலரிடம் மனு செய்யலாம்.பெறப்பட்ட மனுவின் போல் இரு தரப்பினரையும் அழைத்து புகர் கூறப்பட்டள்ள, விவரங்களை ஆய்வு செய்த வரதட்சணை கொடுமைக்கு மனுதாரர் உட்படுத்தப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட எதிர்மனுதாரர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். இச்சட்டம் பற்றி விழிப்புணர்வும் மாவட்ட சமுகநல அலுவலகத்தில் வழங்கப்பட்டும் வருகிறது