Close

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், சென்னை மாவட்டம்

சென்னை மாவட்டத்தில் இரண்டு மேல்நிலை பள்ளிகள், மூன்று உயர்நிலை பள்ளிகள், ஐந்து ஆரம்ப பள்ளிகள் மற்றும் ஒரு அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளி செயல்படுகின்றன. அனைத்து பள்ளிகளும் அரசு கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றன. அனைத்து அடிப்படை வசதிகளும் போதுமானதாக உள்ளன.

2017-2018 ஆம் ஆண்டில் ரூ 20 லட்சம், 2016-17 ரூ .13.59 லட்சம், 2017-18 ரூ .10.13 லட்சம் செலவில் ஆதி திராவிடர் நலத்துறை.மூலம் பழுது பணிகள் செய்யப்பட்டுள்ளது

பள்ளிகள்

சென்னை மாவட்டத்தில் 11 ஆதிதிராவிடர் நல பள்ளிகளும், ஒரு பழங்குடி உண்டி உறைவிட பள்ளி உள்ளன.

பள்ளிகள் பள்ளி எண்ணிக்கை
ஆரம்ப பள்ளிகள் 5
ஒரு பழங்குடி உண்டி உறைவிட ஆரம்ப பள்ளி 1
உயர்நிலை பள்ளிகள் 3
மேல்நிலைப் பள்ளிகள் 2
மொத்தம்
11

இந்த பள்ளிகளில் 1098 மாணவர்கள் மற்றும் 1043 மாணவிகள் படித்து வருகின்றனர். பாடப்புத்தகங்கள், இரண்டு செட் குறிப்பேடுகள் மற்றும் நான்கு செட் சீருடைகள் ஒவ்வொரு ஆண்டும் மாணாக்கர்களுக்கு வழங்கப்படுகின்றன.

தேர்வு முடிவு

வருடம் 10 -ம் வகுப்பு சதவிகிதம் 12- ம் வகுப்பு சதவிகிதம்
2017-2018 92.4% 92.3%

விடுதி

ஆதி திராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சென்னை மாவட்ட செயல்பாட்டில் 22 ஆதி திராவிடர் நல விடுதிகள் செயல்படுகின்றன.

இந்த விடுதிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

விடுதிகள் ஆண் பெண்
ஆராய்ச்சி விடுதிகள் 1 1
முதுகலை விடுதிகள் 1 3
கல்லூரி விடுதிகள் 7 4
தொழிற்பயிற்சி (ஐ .டி .ஐ) விடுதிகள் 2 1
பள்ளி விடுதிகள் 1 1
மொத்தம்
12
10

இந்த விடுதிகளில் 2459 மாணாக்கர்கள் தங்கி உள்ளனர். பள்ளி விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு இரண்டு சீருடைகள் வழங்கப்படுகின்றன. சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கிகள் 10 மற்றும் 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

அரசு ஆணை எண் 79 தேதி 13-08-2012-ல் தெரிவித்துள்ளபடி 85 % எஸ்சி/எஸ்டி, 15 % பிசி/எம்பிசி, 5% ஓசி, என்ற வீதத்தில் மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். விடுதியில் சேர விரும்பும் மாணவர்களின் விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுதியில் அனுமதிக்கப்படுகின்றனர். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்குள் இருக்க வேண்டும்.

கல்வி உதவித்தொகை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணவிகள் தொடர்ந்து கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் பொருட்டு 3 முதல் 5 வகுப்புவரை ரூ.500-ம், 6ம் வகுப்பிற்கு ரூ.1000/-ம் மற்றும் 8ம் வகுப்பிற்கு ரூ.1500/ம் வருடத்திற்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. அதற்குரிய விண்ணப்பங்கள் பள்ளியின் மூலம் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.போஸ்ட் மெட்ரிக் மற்றும் ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகைகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்/கல்லூரி முதல்வர்களால் ஆன்-லைன்-ல் பதிவு செய்யப்பட்டு இவ்வலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு, பரிசீலனை செய்யப்பட்டு ஒப்பளிக்கப்படுகிறது.

கீழ்க்கண்ட ஆவணங்களை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

  1. சாதிச்சான்றிதழ் நகல்.
  2. வருமான சான்றிதழ்.
  3. பள்ளியில் பயிலுவதற்குரிய தலைமை ஆசிரியர் ஒப்பம்.
  4. ஆதார் கார்டு நகல்.
  5. வங்கி கணக்கு விவரம்.

விடுதி ஆய்வு

மாவட்ட மட்டத்தில் உள்ள விடுதிகளின் நிலைமையை வலுப்படுத்தி மேம்படுத்தவும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளிலும் வழக்கமான ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

விடுதிகளின் பழுது மற்றும் பராமரிப்பு

அரசாணை எண் 15 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத் துறை (ஏடிடபிள்யூ 2) தேதி 15.03.2017-ன் படி சென்னை மாவட்டத்திற்கு ரூ.37.60 இலட்சம் செலவில் 10 விடுதிகளுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்டு செய்யப்பட்டுள்ளது

விடுதி விவரங்கள் – 2017-18

2017-18ம் கல்வி ஆண்டில் ரூ.1599.106 இலட்சம் கல்வி உதவித்தொகை 39,111 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர் விடுதி

Sl.No. விடுதி பெயர் கட்டிட விவரம் மாணவர் எண்ணிக்கை தற்போது தங்கியுள்ள மாணவர் எண்ணிக்கை
1. எம்.சி.ராஜா காலேஸ் மாணவர் விடுதி 396, வெஸ்ட் சி.ஐ.டி நகர், சைதாப்பேட்டை சென்னை -15 சொந்த கட்டிடம் 490 476
2. எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி (இணைப்பு), 396, பல்லக்கு மண்டியியம் தெரு, மைலாப்பூர் சென்னை -4 சொந்த கட்டிடம் 150 150
3. அரசு கல்லூரி மாணவர் விடுதி, எண் 7, செமிரிஸ் சாலை, நந்தனம், சென்னை -35 சொந்த கட்டிடம் 340 315
4. அரசு கல்லூரி மாணவர் விடுதி, எண் .29, சக்தி நகர் கோடம்பாக்கம், சென்னை -24. சொந்த கட்டிடம் 250 250
5. அரசு கல்லூரி மாணவர் விடுதி, சென்னை [கோடம்பாக்கம்], எண் 29, சக்தி நகர் கோடம்பாக்கம், சென்னை -24. சொந்த கட்டிடம் 100 100