Close

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்

தாட்கோ

  1. வெற்றி தொழில் முனைவோர் திட்டம்

தகுதி

  • விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும்.
  • 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

மானிய விபரம்

  • இத்திட்டத்தின் மூலம் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு மொத்த திட்ட தொகையில் மூலதன மானியம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • திட்ட தொகையில் 35% அல்லது அதிகபட்சமாக ரூ.3.50 இலட்சம், இதில் எது குறைவானதோ அது மானியமாக விடுவிக்கப்படும்.
  • 6% வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.
  1. ஆதிதிராவிடர்களுக்கான முன்னேற்ற திட்டம்

(Pradhan Mantri Anusuchit Jaati Abhyuday Yojna – PM-AJAY)

தகுதி

  • விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும்.
  • 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

மானிய விபரம்

  • திட்ட தொகையில் 50% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.50,000/- இதில் எது குறைவானதோ அது மானியமாக விடுவிக்கப்படும்.

நிபந்தனைகள்

இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சொத்துக்கள் விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம் / நேரடியாக)

Apply online: https://newscheme.tahdco.com

  1. கல்விக்கடன் திட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கருக்கு பட்டப்படிப்பினை உள்நாடு மற்றும் அயல் நாட்டில் பயில்வதற்காக NSFDC, NSTFDC, NSKFDC போன்ற நிதி நிறுவனங்களிடமிருந்து குறைந்த வட்டியில் கடன் பெற்று மாணாக்கர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டு வருகிறது.

முழுநேர படிப்புகளுக்கான மாணாக்கர்களுக்கு மிகக்குறைந்த வட்டியில் கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

  • ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு இந்திய நாட்டில் மற்றும் வெளிநாட்டில் கல்வி பயில அதிகபட்சமாக ரூ.40.00 இலட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
  • பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு இந்திய நாட்டில் மற்றும் வெளிநாட்டில் கல்வி பயில அதிகபட்சமாக ரூ.10.00 இலட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
  • தூய்மை பணியாளர்களின் மகன்/மகள் இந்திய நாட்டில் கல்வி பயில ரூ.10.00 இலட்சம் மற்றும் வெளிநாட்டில் கல்வி பயில அதிகபட்சமாக ரூ.20.00 இலட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

தகுதி

Ø ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் இனத்தவராக இருக்க வேண்டும்.

Ø ஆதிதிராவிடர் மாணாக்கர்ளுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5.00 இலட்சம் இருக்க வேண்டும்.

Ø பழங்குடியினர் மாணாக்கர்ளுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சம் இருக்க வேண்டும்.

Ø தூய்மை பணியாளர்களின் மாணாக்கர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.4.50 இலட்சம் இருக்க வேண்டும்.

வட்டி விகிதம்

Ø ஆதிதிராவிட மாணாக்கர்களுக்கு – 6.5%,

Ø பழங்குடியின மாணாக்கர்களுக்கு – 6%

Ø தூய்மை பணியாளர்களின் மாணவர்கள் இந்திய நாட்டில் கல்வி பயில-6% வெளிநாட்டில் கல்வி பயில -7% மற்றும் இந்திய நாட்டில் கல்வி பயில மாணவிகளுக்கு -5.5% வெளி நாட்டில் கல்வி பயில மாணவிகளுக்கு -6.5%

கடனை திரும்ப செலுத்தும் காலம்

Ø கல்வி கடன் பெற்ற மாதத்தில் இருந்து வட்டித்தொகை, மாதம் தோறும் செலுத்த வேண்டும்.

Ø படிப்பு முடித்த அல்லது வேலைக்கு செல்லுதல் இதில் எது முன்னதோ, அதிலிருந்து 5 ஆண்டுகளில் 60 தவணைகளில் கடனை திரும்ப செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்)

Apply online: https://tel.tahdco.com

மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்

சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, விலைப்புள்ளி & திட்ட அறிக்கை.

விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்)

Apply online: https://newscheme.tahdco.com

தொடர்பு அலுவலரின்

மாவட்ட மேலாளர், தாட்கோ,

2-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

“சிங்கரவேலர் மாளிகை“

எண்: 33, இ. ராஜாஜி சாலை, சென்னை-600 001.

மின்னஞ்சல்: dmtahdcomas@gmail.com
தொலைபேசி: 044-25246344

துறைத்தலைமை அலுவக தொலைபேசி எண்/மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி

மேலாண்மை இயக்குநர்,

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்,

தாட்கோ, தலைமை அலுவலகம்,

எண் 31, செனடாப் சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600018.

தொலைபேசி எண்: 044 24310221

மின்னஞ்சல் முகவரி: tahdcoheadoffice@gmail.com

இணையதள முகவரி: www.tahdco.com

தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம்

தமிழ்நாடு தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியத்தில் உறுப்பினர் பதிவுக்கான விண்ணப்பித்தினை அந்தந்த மாவட்டத்தின் மாநகராட்சி / மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் பெறலாம்.

இந்நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு பெறத் தகுதியுடைய நபர்கள் தூய்மைப் பணிபுரிவோர் என்பதற்கான சான்றிதழை சுகாதார ஆய்வாளர்/ உதவி செயற் பொறியாளர் / செயல் அலுவலர் / மாநகராட்சி ஆணையர் / வட்டாட்சியர் அலுவலரிடம் பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் மாவட்ட மேலாளர், தாட்கோ, சென்னை அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்விண்ணப்பங்கள் தாட்கோ மாவட்ட மேலாளரால் சரிபார்க்கப்பட்டு, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

வ. எண் நலத்திட்டத்தின் பெயர் அளிக்கப்படும் தொகை
(ரூபாய்)
1 விபத்து காப்பீட்டுத்திட்டம்
அ. பணியிடத்தில் விபத்து இறப்பு ரூ. 10.00 இலட்சம்
ஆ. பணியிடம் அல்லாத இடத்தில் விபத்து மரணம் / பணியிடத்தில் ஒரு கை, கால், கண் பார்வை இழப்பு, ஏனைய காயங்கள் ஏற்பட்டு முழு இயலாமை, ரூ. 1.00 இலட்சம்
2 இயற்கை மரண உதவித்தொகை ரூ.20,000/-
3 ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.5,000/-
4 முதியோர் ஓய்வூதியம் ரூ.1,000/- மாதந்தோறும்
5 திருமண உதவித்தொகை ஆண் பெண் ரூ.3,000/-
ரூ.5,000/-
6 கண்கண்ணாடி வாங்கிட உதவித்தொகை ரூ.500/-க்கு மிகாமல்
7 மகப்பேறு உதவித்தொகை
அ. மாதம் 1-க்கு ரூ.1,000/- வீதம்  (ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும்) ரூ.6,000/-
ஆ. கருச்சிதைவு ரூ.3,000/-
8 கல்வி உதவித்தொகை
அ. 10ம் வகுப்பு படித்து வரும் (பெண்கள் மட்டும்) ரூ.1,000
ஆ. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்  (இருபாலருக்கும்) ரூ.1,000
இ. 11ம் வகுப்பு படித்து வரும் (பெண்கள் மட்டும்) ரூ.1,000
ஈ. 12ம் வகுப்பு படித்து வரும் (பெண்கள் மட்டும்) ரூ.1,500
உ. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் (இருபாலருக்கும்) ரூ.1,500
ஊ. முறையான பட்டப் படிப்பு(இருபாலருக்கும்) ரூ.1,500
விடுதியில் தங்கி படித்தால் ரூ.1,750
எ. முறையான பட்ட மேற்படிப்பு (இருபாலருக்கும்) ரூ.4,000
. விடுதியில் தங்கி படித்தால் ரூ.5,000
தொழில் நுட்பப் பட்டப்படிப்பு (இருபாலருக்கும்) ரூ.6,000
விடுதியில் தங்கி படித்தால் ரூ.8,000
ஐ. ஐ.டி.ஐ. அல்லது பாலிடெக்னிப் படிப்பு (இருபாலருக்கும்) ரூ.1,000
விடுதியில் தங்கி படித்தால் ரூ.1,200

விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம் / நேரடியாக)

Apply online: https://tncwwb.com/

மாவட்ட ஆட்சியர்,
சென்னை மாவட்டம்.