மாவட்டம் பற்றி
சென்னை பெருநகரம், முற்காலத்தில் மதராசு பட்டிணம் என்று அழைக்கப்பட்டது.இது தொண்டை மண்டல மாகாணத்தில் கடலூர் பெண்ணாறு நதிக்கும் நெல்லூர் பெண்ணாறு நதிக்குமிடையில் அமைந்துள்ள பகுதியாகும். முற்கால சென்னை மாகாணத்தின் தலைநகர் காஞ்சிபுரம் ஆகும். தொண்டை மண்டலம் கி.மு. 2வது நுற்றாண்டில் காஞ்சிபுர சோழ வம்சத்தை சோந்த இரண்டாம் தொண்டைமான் திரையன் என்பரால் ஆட்சி செய்யப்பட்டது. இப்பகுதியானது குறும்பர் இன மக்களின் பூர்வீக வசிப்பிடத்தை உள்ளடக்கியதாக அறியப்படுகிறது.