• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.06.2025) தஞ்சாவூர் மாவட்டத்தில், நடைபெற்ற அரசு விழாவில் போக்குவரத்துத் துறை சார்பில் புதிய விரிவான மினிபஸ் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன் அவர்கள் சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் புதிய விரிவான மினிபஸ் திட்டத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்