Close

மாவட்ட நிர்வாகம்

மாவட்ட ஆட்சியரகம்

மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியரகம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்திய ஆட்சி பணி அதிகாரி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கபட்டு மாவட்ட நிர்வாகத்தை வழி நடத்துகிறார். அவர் மாவட்டத்தின் நிலம் சம்பந்தப் பட்டவை, சமூக பாதுகாப்புத் திட்டம் போன்ற பல முக்கிய பணிகளையும் செயல்படுத்துகிறார்.

கூடுதல் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் துறையின் நேரடி நிர்வாகத் தலைவராகயிருந்து மாவட்டத்தில் வருவாய்த்துறை சட்டங்களின் செயல்பாட்டினை உறுதி செய்கிறார். அவர் மாவட்ட கூடுதல் நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். குடிமை பொருட்கள் வழங்கல், நில நிர்வாகம், கனிமம் மற்றும் கனிமப்பொருட்கள் சட்டங்கள், கிராம நிர்வாகம் போன்றவை அவரது முக்கிய பணிகளாகும். வருவாய் துறையின் அனைத்து பிரிவுகளையும் நிர்வகித்து, தினசரி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதும் இவரது பணியாகும். உதவி ஆட்சியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவுகளின் வேலைகளை நிர்வகித்து மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.

வருவாய் நிர்வாகம்
வ.எண் பிரிவு பெயர் பணிகளின் விவரம்
1 வருவாய்த்துறை அலுவலர்களின் பணியமைப்பு, அலுவலக நடைமுறைகள், ஒழுங்கு நடவடிக்கை மற்றும் பல
2 நில ஆக்கிரமிப்பு, குத்தகை, நில மாற்றம், நில ஒப்படை, நகர்ப்புற நில வரி, வசூல் தொகை மேல்முறையீடு, பட்டா மாறுதல் மேல்முறையீடு மற்றும் பல நிலத் தொடர்பாக – பொன்னேரி கோட்டம்
3 சி ஆவணம், கட்டிடங்கள் பதிவறை பராமரிப்பு, சுதந்திர போராளிகள் விவரங்கள், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் சரிபார்ப்பு, வாரிசு சான்றிதழ் வருவாய் வசூல் சட்டம், மாவட்ட அரசிதழ் வெளியீடு, நூலகம் மற்றும் இதர பராமரிப்பு
4 சம்பளம் மற்றும் இதரப்பட்டியல் தயார் செய்தல்,
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பணிக்கால பயன்கள்,
கடனும் முன்பணமும் வரவு செலவு
5 சமுகப்பாதுகாப்புத்திட்டங்கள்,
பொதுமக்களின் குறைதீர்ப்பு
6 வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூல்,
நகர்ப்புற நில வரி வசூல்
7 பட்டா மேல் முறையீடு
நில அபகரிப்பு / நில மாற்றம்
குத்தகை நிலம்
நில எடுப்பு
நில ஆக்கிரமிப்பு
அனைத்து நில தொடர்புடைய பொருள்கள்
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்டம் 1997
8 எப்.எல்2 மற்றும் எப்எல்3 உரிமம் குறித்து பிரேரணை அனுப்புதல்
கலால் சட்டம்/விதிகளுக்குட்பட்டு உரிமம் வழங்குதல்
டாஸ்மாக் மதுபானக்கடை மற்றும் மதுக்கூடம் அமைக்க பரிந்துரை செய்தல்
9 இனச்சான்று மெய்த்தன்மை சரிபார்த்தல்
குடியுரிமை சட்டம்
முக்கிய பிரமுகர் வருகை
தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணைய தேர்வுகள் பிறப்பு தேதி மாற்றம் செய்தல்
கடல் கடந்த இந்தியர் வாரிசுகளுக்குக் காப்பீட்டுத் தொகை வழங்குதல்
தமிழ்நாடு ஆட்சி மொழிச்சட்டம்
10 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
நல பள்ளிகளில் படிக்கும் மாணவ/மாணவியர்களுக்கு உதவித்தொகை வழங்குதல் ஆதிதிராவிடமாணவ/மாணவியர்களுக்கு தங்குவதற்கு விடுதிகள்
ஆதிதிராவிட நல விடுதிகள் பராமரித்தல்
ஆதிதிராவிட நல மாணவ/மாணவியர்களுக்கு இலவச பாடப்புத்தகம், சீருடைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்துதல்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கான வன்கொடுமைத்தடுப்புச்சட்டம்
11 பராமரிப்பு – மாவட்டஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலக கட்டிடங்கள்
பர்மா அகதிகள் தொடர்பான பொருள்கள்
இட வசதி கட்டுப்பாடு
12 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலபள்ளிமற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ/மாணவியர்களுக்கு உதவித்தொகை
பிவ.மிபிவமாணவ/மாணவியர்களை விடுதிகளில் சேர்க்கை
பிவ/மிபிவ/சிறுபான்மைவிடுதிகள் பராமரிப்பு
பிவ/மிபிவ/சிறுபான்மையினருக்கு விலையில்லாதையல் இயந்திரம் மற்றும் இஸ்தரி பெட்டி வழங்கும் திட்டங்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர்
நல பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவிபெறுவது தாட்கோ மூலம் சிறுபான்மையினர்களுக்கு கடன் பெறுதல்
13 அரசு பணியாளர்களுக்கு வீடுகட்டும் முன்பணம் வழங்குதல்
14 நில அளவை நில அளவை மற்றும் பதிவேடுகள் தொடர்பான

பாராளுமன்ற தொகுதிகள் (3)

  1. மத்திய சென்னை
  2. சென்னை வடக்கு
  3. சென்னை தெற்கு

சட்டமன்ற தொகுதிகள் (16)

  1. டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர்
  2. பெரம்பூர்
  3. குளத்தூர்
  4. வில்லிவாக்கம்
  5. திரு.வி.க. நகர்
  6. எழும்பூர்
  7. ராயபுரம்
  8. துறைமுகம்
  9. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
  10. ஆயிரம் விளக்கு
  11. அண்ணா நகர்
  12. விருகம்பாக்கம்
  13. சைதாப்பேட்டை
  14. தியாகராய நகர்
  15. மயிலாப்பூர்
  16. வேளச்சேரி